ஆசிய கோப்பை | இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 

இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றுமொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. 

சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17 அன்று இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக இந்திய அணியில், இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. ஆனால், கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் விவரம் :

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, 
ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார், 
திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், 
ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், 
பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் .பிரதிஷ் கிருஷ்ணா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup 2023 Indian team squad announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->