உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவோம்; அண்ணாமலை அறிவிப்பு..!
Annamalai announces that they will contest in all elections including local body elections
''உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் போட்டியிடுவார்கள்.'' என 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி சண்முக நதியில் பொதுமக்களின் பங்களிப்புடனும், தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடனும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பினர் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். கடந்த சில வாரங்களாக நடந்து வந்த இப்பணி முடிவடைந்து, மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது;
சண்முக நதியைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற பெரிய நோக்கத்தோடு கடந்த 08 வாரங்களாக தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பழநிக்கு வருவோர் சண்முக நதியில் தீர்த்தம் எடுத்து மலைக்கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த நதி மாசடைந்து ஒரு சாக்கடையைப்போல் மாறி மக்கள் இந்தப் பக்கம் வருவதைத் தவிர்த்து நேரடியாக பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
600 டன்னுக்கு மேல் இருந்த குப்பை அள்ளப்பட்டு, புனித நதியாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நதிக்கரையில் முருகப்பெருமானுக்கு உகந்த மரமான கடம்ப மரங்கள் நடப்பட்டுள்ள என்றும், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அறநிலையத் துறை செய்துகொடுப்பதில்லை. சண்முக நதி இன்று சுத்தமாக இருப்பதுபோல் என்றும் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இதையெல்லாம் உள்ளாட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும். உள்ளாட்சி என்பது தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பினர் போட்டியிடுவார்கள். கோட்டையில் கேள்வி கேட்பதைவிட உள்ளாட்சிகளில் கேள்வி கேட்க வேண்டும் என்றும், அந்தந்தப் பகுதியில் உள்ள நல்லவர்கள், வல்லவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும். ஊராட்சி நிர்வாகம் சரியாகச் செயல்படும் இடம் கேரளம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரின் தலைவருக்கு முன்னுரிமை கொடுத்து வேலைசெய்ய வைத்தால்தான், அங்கு வேலை சிறப்பாக நடக்கும் என்றும், அடிப்படை பிரச்சினைகளைச் சரிசெய்து கொடுப்பவர்கள் வேண்டும். நம்மிடம் இலக்கு மட்டுமல்ல, நோக்கமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். தொலைநோக்குப் பார்வையும் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி படிப்படியாக அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai announces that they will contest in all elections including local body elections