குரூப்-2 மெயின் தேர்வு விடைத்தாள் இணையதளத்தில் பதிவேற்றம்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!
Group 2 Main Exam answer sheets uploaded online
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வுக்கான விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.ஸ்ரீவெங்கடபிரியா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 08-ஆம் தேதி நடைபெற்ற குரூப்-2, 2ஏ மெயின் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழித் தாள் விடைத்தாள்கள், பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற பொது அறிவுத் தாள் விடைத்தாள்கள் ஆகியவை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விடைத்தாள் தேவைப்படும் தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவு வாயிலாக உரிய கட்டணத்தை செலுத்தி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி அடுத்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.'' என்று அறிவித்துள்ளார்.
English Summary
Group 2 Main Exam answer sheets uploaded online