மழை வெள்ளத்தால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் துபாய் பயணம்..!
Leader of the Opposition Udhayanidhi Stalin’s trip to Dubai
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சென்னை நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், உதயநிதி ஸ்டாலின் திடீரென நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். விமான நிலையம் வந்த அவரிடம், சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் அதற்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
மழை வெள்ளத்தால் மக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது. பயணத்தை முடித்துக்கொண்டு உதயநிதி வரும் 21-ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
English Summary
Leader of the Opposition Udhayanidhi Stalin’s trip to Dubai