''இஸ்லாமியர்​கள், மத அடை​யாளங்​களு​டன் இந்து கோயில்​களுக்​குள் நுழைவது தன்​னிச்​சையாக நடை​பெறு​வதுபோல் தெரிய​வில்லை''; இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்..! - Seithipunal
Seithipunal


மாற்று மதத்​தினர் மத அடை​யாளங்​களு​டன் இந்து கோயில்​களுக்​குள் நுழைவதைத் தடுக்க உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என இந்து ஆலய பாது​காப்பு இயக்​கம் வலியுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து இந்து ஆலயப் பாது​காப்பு இயக்​கத்​தின் மாநிலப் பொருளாளர் எச்.ஆதிசேஷன் கூறியுள்ளதாவது;

திரு​வண்​ணா​மலை கோயி​லில் திருக்​கார்த்​திகை தீபத் திரு​விழா ஏற்​பாடு தொடர்​பாக ஆய்வு செய்ய வந்த அமைச்​சர்​களு​டன், அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனாவின் உதவியாளர் என்ற பெயரில் இஸ்லாமிய மத அடையாளத்துடன், தொப்பி அணிந்த இஸ்லாமியர் ஒரு​வர் கோயிலுக்​குள் நுழைய முயன்​றுள்​ளார். இதைக் கண்​டிக்​கிறோம். சமீபத்​தில், மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் மதுரை மத்​திய தொகுதி எம்​எல்ஏ முஸ்தபா தொப்​பியுடன் நுழைந்​தது சர்ச்​சைக்கு உள்​ளானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்​துக்​கள் அல்​லாத மாற்று மதத்​தினர் குறிப்​பாக இஸ்லாமியர்​கள், மத அடை​யாளங்​களு​டன் இந்து கோயில்​களுக்​குள் நுழைவது தன்​னிச்​சையாக நடை​பெறு​வதுபோல் தெரிய​வில்லை என்றும், அவ​மானப்​படுத்​தும் செயல் திட்​ட​மாகவே தெரி​கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்து கோயில்​களில் பராமரிக்​கப்​படும் கையேட்​டில், மாற்று மதத்​தினர் முழு நம்​பிக்​கை​யின் அடிப்​படை​யில் கையெழுத்​திட்டு வழிபாடு நடத்​து​வதில் தவறில்லை. ஆனால், மத அடை​யாளத்​தோடு கோயில் வளாகத்​தில் நுழைவதை ஏற்​றுக்​கொள்​ளவே முடி​யாது என்று  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் மௌனமாக இருப்​பது ஏற்​புடையது அல்ல என்றும், உடனடி​யாக விளக்​கம் அளிக்க வேண்​டும். மீண்​டும் இது போன்று நடக்​காது என்று உறுதி அளிக்க வேண்​டும் என்றும், இது தொடர்​பாக அறநிலை​யத் துறை தெளிவான சுற்​றறிக்​கையை கோயில் செயல் அலு​வலர்​களுக்கு அனுப்ப வேண்​டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Hindu Temple Protection Movement states that it is unacceptable for individuals of other faiths to enter Hindu temples while displaying religious symbols of their own faith


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->