BBL களத்தில் காலடி வைக்கிறார் அஷ்வின்...! -இந்தியாவுக்கு புதிய வரலாறு...!
Ashwin steps into BBL field New history for India
தமிழகத்தின் பெருமை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வல்லுநர் 'அஷ்வின்', கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திடீர் “குட்பை” தெரிவித்ததோடு, கடந்த மாதம் ஐ.பி.எல். போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
சர்வதேச அரங்கில் மொத்தம் 765 விக்கெட்டுகள் குவித்த அஷ்வின், இந்திய அணியில் இருந்து முழுமையாக விலகிய நிலையில், வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் கலக்க வாய்ப்பு அவரை நோக்கி ஓடிவருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவின் பிரபல பிக் பாஷ் லீக் (BBL) போட்டியில் அஷ்வினை தங்கள் அணிக்குள் இழுக்க, சிட்னி சிக்சர்ஸ்,சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் என 4 அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. மேலும், வார இறுதிக்குள் இவர்களில் யாரோ ஒருவருடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை எந்த இந்திய வீரரும் BBL அரங்கில் காலடி எடுத்து வைக்காத நிலையில், அந்த வரலாற்று “குறையை” நிரப்பவிருப்பது அஷ்வின் தான்.அதிலும் குறிப்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகே இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதி கிடைக்கிறது.
அதன்படி, தினேஷ் கார்த்திக் (தென்ஆப்பிரிக்கா லீக்), அம்பத்தி ராயுடு (CPL), ராபின் உத்தப்பா – யூசுப் பதான் (ILT20, துபாய்), சுரேஷ் ரெய்னா (T10, அபுதாபி) ஆகியோர் ஏற்கனவே வெளிநாட்டு அரங்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.இப்போது, அந்த பட்டியலில் அஷ்வினும் சேரப்போகிறார்.
English Summary
Ashwin steps into BBL field New history for India