உலக்கோப்பை | மொத்த வன்மத்தையும் இறக்கி வைத்த அஸ்வின்! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் இங்கிலாந்து அணி புதிய யுத்தியை கடைப்பிடித்து வருகிறது.  உலக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டும் வருகிறது.

"பாஸ் பால்" முறை... அதாவது ஆரம்பம் முதலே அட்டாக்கிங் முறையில் பேட்டிங் செய்யும் முறையைத்தான் இங்கிலாந்தணி கடைபிடித்து வருகிறது. 

இந்த அணுகுமுறை நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பேக் ஃபயர் ஆனாலும், அது முறைதான் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி கடைபிடிக்கும் இந்த பாஸ்பால் அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடை பிடித்தால், குறைந்தது அணியில் இருந்து நான்கு வீரர்களை தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என்று, இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இதுகுறித்து பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இங்கிலாந்தின் இத்தகைய அட்டாக்கிங் பேட்டிங் அணுகுமுறையை ஒருபோதும் இந்திய கிரிக்கெட் கலாச்சாரம் ஏற்றுக் கொள்ளாது. அப்படி ஆடும் வீரர்களை அணி தேர்வு குழுவினர் பாதுகாக்க மாட்டார்கள்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு வேண்டுமென்றால் பாஸ்பால் அணுகுமுறை உதவும். இந்திய சூழ்நிலைக்கு இது உதவாது என்று அஸ்வின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அஸ்வின், தற்போது நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாகத் தான் ஆடி வருகிறோம். ஆனால் விரைவில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும். அப்படி மாறும் போது, அந்த காலகட்டத்தில் அனைத்துமே சுமூகமாக அமையாது. நிச்சயம் சில பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது.

ஒருவேளை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில், அந்த நாட்டு வீரர்களை போலவே நம் வீரர்களும் அட்டாக்கிங் முறையில் பேட்டிங் செய்து அவுட் ஆகி, அதனால் இந்திய அணி இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் தோல்வியடைந்தால் என்ன ஆகும்...? என்ன சொல்வார்கள்...? 

அதைவிட அணியின் தேர்வு குழு என்ன செய்யும் தெரியுமா? இந்திய அணியில் உள்ள 11 வீரர்களில் குறைந்தது நான்கு வீரர்களையாவது அணியை விட்டு நீக்கிவிடுவார்கள்.

இங்கிலாந்து அணிக்கு இது சரியாக அமையலாம். அதற்காக அந்த அணியை பார்த்து நாம் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் இங்கிலாந்து அணியின் நிர்வாகம் அந்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகிறது. ரசிகர்களும் அந்த அணி தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அதனை ரசிக்கவே செய்கின்றனர். நம் இந்திய கிரிக்கெட் கலாச்சாரம் அதற்கு ஒத்து வராது என்று அஸ்வின் தனது கருத்தினை பதிவு செய்தார்.

மேலும் அடுத்த நடக்க உள்ள உலக கோப்பை வெற்றி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவிக்கையில், உலகக் கோப்பையை வெல்வது என்பது சுலபமான காரியம் அல்ல. ஒரு வீரரை அணியில் தக்க வைப்பதாலும், ஒரு வீரரை அணியிலிருந்து வெளியேற்றுவதாலும் நாம் உலகக் கோப்பையை வென்று விட முடியாது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அவரை அணியில் சேர்த்திருக்கலாம், இவரை ஏன் அணியில் எடுத்தார்கள் என்று அதைப்பற்றி யோசிப்பதில் நம் இந்தியர்கள் படு கில்லாடிகள்.

ஆனால், இந்த உலகக் கோப்பையை பொறுத்த வரை, எல்லாம் நடந்து முடிந்த பிறகு யோசித்தால் வேலைக்கு ஆகாது. பல முக்கிய தொடர்களில் நாம் அரை இறுதி வரை முன்னேறி இருக்கிறோம். ஆனால் அரை இறுதி ஆட்டம் நமக்கு நன்றாக முடிந்ததில்லை" என்று ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன் இறுதி ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வுகுழு எடுத்து இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashwin say about ICC WC 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->