குறைவான நாட்களில், அதிக விக்கெட், முரளிதரன், ஷேன் வார்னேவை முந்திய அஸ்வின்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது கடந்த 24ஆம் தேதி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.  2 நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டி, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 112 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி எட்டி பிடித்து வெற்றியை பதிவு செய்தது. 

இந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 400 ஆவது விக்கெட்டை நிறைவுசெய்தார். உலக அளவில் அதிவேகமாக 400 விக்கெட் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றிருக்கிறார். முன்னதாக இலங்கையின் முத்தையா முரளிதரன் 72 போட்டிகளில் இந்த சாதனையை எட்டிப் பிடித்திருக்கிறார் தற்போது அதனை அஸ்வின் 77 போட்டிகள் நிறைவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் அறிமுகமான நாளிலிருந்து விரைவான நாட்களில் 400 விக்கெட்களை எட்டிப் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் அஸ்வின் இரண்டாவது இடத்தினைப் படித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மெக்ராத் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் இந்த காலகட்டத்திற்குள் 87 போட்டிகளில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்ராத் 8 வருடம் 341 நாட்களில் 87 போட்டிகளுடன் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். அஸ்வின் 77 போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல முத்தையா முரளிதரனை விட அஸ்வின் 28 நாட்கள் முன்னதாகவே இந்த சாதனையை படைத்திருக்கிறார். அஸ்வின் 9 வருடங்கள் 109 நாட்களில் இந்த இலக்கை எட்டி பிடித்து இருக்கிறார். முத்தையா முரளிதரன் 9 வருடங்கள் 137 நாட்களில் இந்த இலக்கை எட்டி பிடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 9 வருடங்கள் 233 நாட்களில் இந்த இலக்கை எட்டி பிடித்து இருக்கிறார். 

அதேபோல இந்திய வீரர்களில் மிக விரைவாக 400 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் அஸ்வின், அணில் கும்ப்ளே 85 போட்டிகளிலும் ஹர்பஜன்சிங் 96 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 400 விக்கெட்டுகளை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக  கபில் தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் அதற்கடுத்தபடியாக இவர் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ashwin quickest bowler to get 400 wkts over murali and warne


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->