யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கம் வென்ற ஆஷிஸ் யாதவ்; ஏமாற்றமளித்த தமிழக வீரர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்​கா​வின் யூஜின் நகரில் நடைபெற்று வரும் யு-20 உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டியில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இந்​தி​யா​வின் ஆஷிஸ் யாதவ் 74.09 மீட்​டர் தூரம் ஈட்​டியை செலுத்தி 02-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்று அசத்தியுள்ளார்.

போட்டியில், தென் ஆப்​பிரிக்​கா​வின் யான்​-ஹென்ட்​ரிக் ஹேமன்ஸ் (80.50 மீட்டர்) தங்​கப் பதக்​க​மும், டொமினி​கா​வின் அடிசன் ஜேம்ஸ் (73.89 மீட்​டர்) வெண்​கலப் பதக்​க​மும் வென்றுள்ளனர். போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தரணிதரன் 72.35 மீட்​டர் தூரம் எறிந்து 06-வது இடம் பிடித்துள்ளார்.

19 வயதான ஆஷிஸ் யாதவ், யு-20 உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் ஈட்டி எறிதலில் பதக்​கம் வென்ற 02-வது இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்றுள்ளார். இதற்கு முன்​னர் ஒலிம்பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு போலந்​தில் நடை​பெற்ற போட்​டி​யில் 86.48 மீட்​டர் தூரம் எறிந்து தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார். உலக ஜூனியர் அரங்​கில் நீரஜ் சோப்ரா எறிந்த தூரமே தற்​போதும் சாதனை​யாக உள்​ளது.

அடுத்ததாக, மகளிருக்​கான உயரம் தாண்​டு​தலில் இந்​தி​யா​வின் பூஜா சிங் 1.79 மீட்​டர் உயரம் தாண்டி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியுள்ளார். ஆடவருக்​கான நீளம் தாண்​டு​தல் தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஷாந​வாஸ் கான் (7.73 மீட்​டர்), ஜித்​தின் அர்​ஜுனா (7.57 மீட்​டர்) ஆகியோர் இறுதி சுற்​றுக்​கு தகு​தி பெற்​றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ashish Yadav wins silver medal at U20 World Athletics Championships


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->