ஐபிஎல் 2019 கனவு அணி! இடம் கிடைக்காத முன்னணி வீரர்கள்! ஆதிக்கம் செலுத்தும் அணி எது தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான ஐபிஎல் 2019 சீசன் கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கியது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், லீக் போட்டிகளின் அடிப்படையில் இந்த வருடத்திற்கான கனவு அணியினை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் அணில் கும்ப்ளே வெளியிட்டுள்ளார். 

ஒவ்வொரு வருடமும் லீக் ஆட்டத்தில் வீரர்களின் செயல்பாட்டினை பொறுத்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தினை ஆராய்ந்து அவர்களின் கனவு அணியை வெளியிடுவார்கள். 

அதன்படி இந்திய அணியின்  முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனும், சுழல் ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே தனது கனவு அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான  விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோருக்கு இடமில்லை.

அனில் கும்ப்ளே கனவு அணியில் ஹைதராபாத் அணி சார்பில் வார்னர், பஞ்சாப் அணி சார்பில் ராகுல், ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயாஸ் கோபால், கொல்கத்தா அணி சார்பில் அந்ரே ரஸல், மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சென்னை அணி சார்பில் எம்எஸ் டோனி, இம்ரான் தாஹிர், டெல்லி அணி சார்பில் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ரபாடா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். பெங்களூர் அணி தரப்பில் யாருமே பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அணில் கும்ப்ளேவின் 11 பேர் கொண்ட கனவு அணி : 1. டேவிட் வார்னர், 2. கேஎல் ராகுல், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. எம்எஸ் டோனி 6. அந்ரே ரஸல், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஷ்ரேயாஸ் கோபால், 9. இம்ரான் தாஹிர், 10. ரபாடா, 11. பும்ரா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

anil kumble dream eleven for this year ipl


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->