கிரிக்கெட் களத்தை கலங்கடித்த.... சுழற்பந்து ஜாம்பவான்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


அனில் கும்ப்ளே:

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான்...

டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன்....

18 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தை கலங்கடித்தவர்...

600-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய சுழற்பந்து வீச்சாளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்.

எனப் பன்முகத்தன்மை கொண்டவர் அனில் கும்ப்ளே.

பிறப்பு :

அனில் கும்ப்ளே 1970ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்க;ரில் பிறந்தார். இவர் ஜம்போ என்றும் அழைக்கப்படுகிறார்.

குடும்பம் :

அனில் கும்ப்ளே தந்தை கிருஷ்ணசாமி, தாய் சரோஜா. இவருக்கு தினேஷ் கும்ப்ளே எனும் சகோதரர் உள்ளார். இவர் சேத்தானா கும்ப்ளே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மயாஸ் கும்ப்ளே எனும் மகனும், ஸ்வாஸ்தி கும்ப்ளே எனும் மகளும் உள்ளனர்.

சாதனைகள் :

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த இரண்டாவது வீரர், ஒரே இந்தியர் என்ற பெருமையையும், சாதனையையும் கும்ப்ளே தன்வசம் வைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர் இந்தச் சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1993ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டார்.

பின் 1996ஆம் ஆண்டில் விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் நாட்குறிப்பால் சிறந்த வீரராகத் தேர்வானார்.

இந்திய அணிக்காக இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

விருதுகள் :

1995ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது அனில் கும்ப்ளேக்கு வழங்கப்பட்டது.

இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதினை 2005ஆம் ஆண்டில் கும்ப்ளே பெற்றார்.

ஓய்வு :

நவம்பர் 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anil gumle history


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal