#IPL2023 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டி.20 லீக் போட்டியில் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக மார்க்ரம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiden Markram appointed sunrisers Hyderabad captain


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->