மிக குறைவான பந்துகளில் முடிந்த போட்டி, நியூசி - ஆசியை வீழ்த்திய இந்தியா - இங்கிலாந்து!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது கடந்த 24ஆம் தேதி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.  2 நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டி,  பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 112 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி எட்டி பிடித்து வெற்றியை பதிவு செய்தது.

குறைவான பந்துகளில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டி என்ற வகையில் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த இந்தியா-இங்கிலாந்து போட்டியானது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 842 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களும், இந்திய அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களும்,  இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 30.4 ஓவர்களும், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7.4  ஓவர்களையும் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  ஆக மொத்தம் இந்த போட்டியில் 842 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. 

இதற்கு முன்னதாக 1946ஆம் ஆண்டு வெலிங்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியானது 872 பந்துகளில் நிறைவடைந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கடந்த 2002 இல் நடைபெற்ற ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இடையேயான போட்டி 893 பந்துகளில் நிறைவடைந்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக செஞ்சூரியன் இல்  2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற  தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டியானது 883 பந்துகளில் நிறைவடைந்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாமலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாமலும், முடிவுக்காக ஒரே இன்னிங்க்ஸுடன் போட்டியை முடித்துக்கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ahmadabad pink ball test register as lowest ball tests in test history


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal