#T20WorldCup : இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடையும் - அப்ரிடி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 
அதனைத் தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அரையிறுதி போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் சம பலத்துடன் தான் இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் சிறப்பாகவே விளையாடி வருகிறது. 

ஆனால், இந்தியாவை விட இங்கிலாந்தின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக இருக்கிறது. அதன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக எனக்கு தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய உலகக் கோப்பை தொடர்களில் என்னதான் நம்முடைய கருத்துக்களை கூறினாலும், போட்டியில் எந்த அணி 100% பங்களிப்பு மற்றும் குறைவான தவறுகளை செய்கிறார்களோ அந்த அணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afridi predicted England win against India in Semifinal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->