தோனியின் ஓய்வு குறித்து உருக்கமாக பதிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.. வைரல் பதிவு.! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல். இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 16வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தல தோனி கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 41 வயதாகும் தோனி நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு தோனி தனது ஓய்வு குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் "சச்சின் அவுட் ஆனபிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க செய்த இளைஞன்(இன்றும்). தோனி என்ற ஒற்றைபெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்!" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK jayakumar tweet about CSK captain MS Dhoni retirement


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->