அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம்: பொல்லார்ட் சாதனை சமன்.. ரசல் சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா.. புதிய உலக சாதனை - Seithipunal
Seithipunal


நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்த வெற்றி மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பவர்பிளே ஓவர்களிலேயே நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 12 ஓவர்கள் வரை இடைவிடாத தாக்குதலை நடத்தி, 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்களை குவித்தார். 240 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய அவரது ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கேப்டன் சூரியகுமார் யாதவ் 32 (22), ஹர்டிக் பாண்டியா 25 (16), ரிங்கு சிங் 44* (20) ரன்களை சேர்த்ததன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 239 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நிர்ணயித்தது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி கடுமையாக போராடியபோதும், இந்தியாவின் வலுவான பந்துவீச்சுக்கு முன் தளர்ந்தது. கிளென் பிலிப்ஸ் 78 ரன்களும், மார்க் சேப்மேன் 39 ரன்களும் எடுத்தபோதும், அந்த அணி 20 ஓவர்களில் 190/7 ரன்களையே எடுக்க முடிந்தது. இந்திய பந்துவீச்சில் சிவம் துபே மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இந்தப் போட்டியின் மூலம் அபிஷேக் ஷர்மா இரண்டு முக்கியமான சாதனைகளையும் படைத்துள்ளார். சர்வதேசம், உள்ளூர் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து டி20 போட்டிகளையும் சேர்த்து, 2,895 பந்துகளில் 5,000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 5,000 ரன்களை எடுத்த வீரர் என்ற ஆண்ட்ரே ரசலின் சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையை அவர் உருவாக்கியுள்ளார். இதற்கு முன் ரசல் 2,942 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

மேலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கைரன் பொல்லார்ட்டின் சாதனையையும் அபிஷேக் ஷர்மா சமன் செய்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஹமில்டனில் தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 13 சிக்ஸர்கள் அடித்ததே இந்தப் பட்டியலில் முதலிடமாக உள்ளது.

இந்த வெற்றியும், அபிஷேக் ஷர்மாவின் சாதனைமிகு ஆட்டமும், 2026 டி20 உலகக்கோப்பையை நோக்கி இந்திய அணி சரியான பாதையில் பயணித்து வருவதை தெளிவாக காட்டுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abhishek Sharma impressive performance Pollard equals the record Abhishek Sharma breaks Russell's record


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->