திருமணத்துக்கு இரண்டரை மாதம்… வரதட்சணை சிக்கலில் உயிர் விட்ட ஆசிரியை...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தியின் மகள் பிரியங்கா (30), தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும் புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் தொடக்கத்திலிருந்தே வரதட்சணை விவகாரம் காரணமாக இரு குடும்பங்களுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்துள்ளது.திருமணத்தின் போது 10 பவுன் நகை தருவதாக உறுதியளித்திருந்தாலும், 5 பவுன் மட்டுமே வழங்க முடிந்ததால், அந்த குறை தீராத சச்சரவாக மாறியது.

இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரியங்கா பெற்றோர் வீட்டில் தங்கி வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், திருமணமாகி இரண்டரை மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மரணம் அடைந்ததால், இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.இதற்கிடையே, பிரியங்காவின் தாயார் சுமதி போலீசில் அளித்த புகாரில் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

“மீதமுள்ள 5 பவுன் நகையை கொடுக்காவிட்டால், என் மகளை ஆபாசமாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அவரது கணவரே மிரட்டியுள்ளார். இந்த கொடூரமான மிரட்டல்களால் மனமுடைந்த என் மகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.

அவரது மரணத்திற்கு கணவரும் அவரது பெற்றோரும் தான் காரணம்” என அவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two and half months before wedding teacher loses her life dowry issues What happened


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->