இன்ஸ்டாகிராம் ரீல்களில் தொடங்கிய ரொமான்ஸ்…! 16 வயது சிறுமி கர்ப்பம்...! - சிறுவன் மீது போக்சோ வழக்கு - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு 16 வயது மகள் உள்ளார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்ற அந்த சிறுமி, பெற்றோர் வேலைக்குச் செல்லும் நேரங்களில், செல்போனில் நீண்ட நேரம் மூழ்கி வந்துள்ளார்.

அப்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நட்பாக தொடங்கிய இந்த தொடர்பு, நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஓடும் மின்சார ரெயிலில் அந்த சிறுவன் சிறுமிக்கு தாலி கட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பலமுறை இருவரும் யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் குடும்பத்தாரின் கவனத்திற்கு வராமல், இருவரும் தங்களது வீடுகளில் வழக்கம்போல் வாழ்ந்து வந்துள்ளனர்.இந்த நிலையில், சிறுமிக்கு தொடர்ந்து ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக, அவரது தாய் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கர்ப்பத்திற்கு காரணமான சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மீது கும்மிடிப்பூண்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

romance that began Instagram Reels 16 year old girl becomes pregnant POCSO case filed against boy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->