இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் தேர்வு சரியானதா..? ஏபி டி வில்லியர்ஸ் கூறியது என்ன..? - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவையுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் அனுபவம் வாய்ந்த ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த அணியில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ், ரிஷப் பண்ட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்குச் சற்று ஆச்சரியமளிக்கிறதாக தெரிவித்துள்ளார். அதாவது, பந்த் சமீபத்திய ஐ.பி.எல் தொடரில் அவரது தன்னம்பிக்கை மற்றும் எனர்ஜி குறைவாகவே காணப்பட்டதாகவும், ஆனாலும், தனது நாட்டுக்காக விளையாடும் போது அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புவதாகவும், களத்தில் அவரது தீவிரமான ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் இணைந்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தையும் ஆற்றலையும் தரும் என டி வில்லியர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் அணியில் இணைந்திருப்பது, இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கேப்டன் சுப்மன் கில்லுக்கு கூடுதல் பவுலிங் ஆப்ஷன்களை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் காலி மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் ஒரு பகுதியாகும். தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 05-வது இடத்திலும், இலங்கை 6-வது இடத்திலும் உள்ளதால், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இரு அணிகளுக்கும் இத்தொடர் மிகவும் முக்கியமானது.

இலங்கை தொடருக்கான இந்திய அணிவீரர்கள்; 
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரன்ஷ் ஜெயின்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AB de Villiers surprised by Rishabh Pants selection for Test series against Sri Lanka


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->