அதிசயம் ஆனால் உண்மை; 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட 550 ஆண்டுகள் பழமையான 'நெய் கோவில்'; விஞ்ஞானிகளையே மெய் சிலிர்க்க வைக்கும் கட்டிக்கலை..! - Seithipunal
Seithipunal


பொதுவாக எந்த ஒரு கட்டிடங்களையும் காட்டும் போது சிமெண்ட் , மணல், செங்கல், மண், அல்லது கார்களை கொண்டு கட்டுவது வழக்கமாக இருக்கும்.  ஆனால், இந்தியாவில் ஒரு அற்புதமான கோயில்  ஒன்று அதன் கட்டுமானத்திற்குத் தண்ணீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 40,000 கிலோ பசு நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. அந்த கோவில் பற்றி  இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாமா?

இந்த பிரமாண்டமான நெய் கோவில் ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'பண்டாசர் ஜைனக் கோயில்' ஆகும், இந்தக் கோயிலின் கட்டுமானம் 15 ஆம் நூற்றாண்டில் (அதாவது கி.பி. 1468 இல்) பண்டாசர் ஓஸ்வால் என்ற செல்வந்த ஜைன வணிகரால் தொடங்கப்பட்டது. மூன்று அடுக்குகளைக்கொண்ட இந்த கோயில், 05வது ஜைன தீர்த்தங்கரரான ஸ்ரீ சுமதி நாத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த கோயில் கட்டப்பட்டபோது அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவியதாகவும், அப்போது, ​​பண்டாசா ஓஸ்வால் என்ற வணிகர், சாந்து (மணல் மற்றும் சுண்ணாம்புக் கலவை) தயாரிக்க தண்ணீருக்குப் பதிலாக முழுவதுமாக நெய்யைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவர் சுமார் 40,000 கிலோ நெய்யை நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோவிலில் இன்றும் கூட, கடுமையான கோடை வெயிலில், தரை மற்றும் சுவர்களில் இருந்து நெய் வழிந்து கொண்டிருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த கோவில் வளாகத்திற்கு வரும் பக்தர்கள் இன்றும் அந்த நெய்யின் நறுமணத்தை நுகர கூடியதாக உள்ளதாம்.

இந்த கோவில் கட்டுமானத்தில் நெய் பயன்பாட்டைத் தவிர, அதன் அற்புதமான கட்டிடக்கலைக்காக உலகப் புகழ்பெற்றுள்ளது. அதாவது, சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலில், அழகான ராஜபுத் மற்றும் ஜைன பாணி சுவரோவியங்கள், கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் தங்க இலைச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மேல் தளத்திலிருந்து முழு பிகானேர் நகரத்தின் பரந்த காட்சியைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்தக் கோயில் மற்றுமொரு முக்கிய அம்சமாக ராஜ்புத் மற்றும் ஜைன கட்டிடக்கலைகளின் கலவையில் கட்டப்பட்டுள்ளதோடு, இதன் கோபுரங்களில் வட இந்தியாவின் புகழ்பெற்ற நாகரா பாணியின் தாக்கமும் காணப்படுகிறது. 

இந்த வரலாற்று சிறப்புமிக்க கோயிலின் பிரதான கட்டமைப்பு, பிகானேரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் சிறப்பு வாய்ந்த சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கு செங்கற்களைப் பொருத்துவதற்கு நீருக்குப் பதிலாக நெய் மற்றும் சுண்ணாம்பு கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) பாதுகாப்பில் உள்ள இந்த கோயில் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் விஞ்ஞானிகளையும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

இந்த நெய் கோயில்  சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான கட்டிடம். இதன் சுவர்கள், தூண்கள் மற்றும் மண்டபங்களில் நுணுக்கமான மஞ்சள் கல் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கோயிலின் கருவறை ஒரு பஞ்சரதம் உள்ளது. அதன் உச்சியில் கர்ணனும் அமலகர்களும் கொண்ட ஒரு சிகரம் அமைந்துள்ளது.

கோயிலின் சுவர்கள், 24 தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அழகான இலை ஓவியங்கள், சுவரோவியங்கள் மற்றும் நேர்த்தியான கண்ணாடி வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தின் ஆன்மீகச் சூழலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலை நேரம் கிடைக்கும் போது நீங்களும் சென்று பார்த்துவிடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bandasa Jain temple built with 40000 kg of ghee


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




சினிமா

Seithipunal
--> -->