ஆட்டோ ஓட்டுநர் ரூ.5 கூடுதலாக கேட்டதால் ஆத்திரம்; நடுரோட்டில் இழுத்துப்போட்டு தாக்கிய பெண்; நடந்தது என்ன..?
An angry woman attacked an auto driver in the middle of the road after he asked for an extra Rs 5
உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் வெளியில் இருந்து வீடு திரும்புவதற்கு நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து எதுவும் வராததால் அவ்வழியாக வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறியுள்ளார்.
குறித்த பெண் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ரிக்ஷாவை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் பயணியிடம் ஓட்டுநர் கூடுதலாக 05 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ரிக்ஷா ஓட்டுநர் வாய்க்கு வந்தபடி பேசியதால் பெண் பயணி கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
உடனே ஆவேசமடைந்த பெண், ஓட்டுநரை வெளியே இழுத்துப் போட்டு தாக்கியுள்ளதோடு, தொடர்ந்து சட்டையை பிடித்து ஓவரா பேசுவாயா? என்று சரமாரியாக தாக்கியுள்ளார். அதற்கு ஓட்டுநரும் பெண் என்றும் பாராமல் பதிலுக்கு தாக்கியுள்ளார்.
இவ்வாறு இருவரும் நடு ரோட்டில் சண்டை போட்டதை பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்தபடி கடந்து சென்றுள்ள மனிதாபிமானம் அற்ற செயலும் அரங்கேறியுள்ளது. அந்த நேரத்தில் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்ததால் அவ்வழியாக வந்த இளைஞர்கள் சிலர், தடுத்து நிறுத்தி சண்டையை விலக்கியுள்ளனர்.
நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டிருந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
English Summary
An angry woman attacked an auto driver in the middle of the road after he asked for an extra Rs 5