தவெக எம்.எல்.ஏ. .விடம் குதிரை பேர வழக்கு: 02 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..!
TVK MLA Conditional bail granted to 2 people in horse trading case
தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு நிபந்தனை ஜாமினும் மற்றொருவருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறை இதுவரை 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
குறித்த வழக்கில் கடந்த 14 தேதி கைது செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த டாக்டர் ராஜசேகர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரும் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக் வந்தது.

இதன்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கின்றன நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கபட்டது.
இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி இளந்திரையன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் நிபந்தனை ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்குவதாகவும் மறு உத்தரவு வரும் வரை காலை 10.30 மணி மற்றும் மாலை 05.30 மற்றும் இரு வேலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்க கூடாது. விசாரணை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு மிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
TVK MLA Conditional bail granted to 2 people in horse trading case