2021 ஐபிஎல் தொடரில் ஏற்படப்போகும் மாற்றம்.. புதிதாக இணையும் அணி.! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது.

நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி போராடி தோல்வி அடைந்தது. 2013, 2015, 2017, 2019 & 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று மும்பை சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், 2021 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக மேலும் ஒரு அணியை சேர்க்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் நகரை மையப்படுத்தி 9-வது அணி தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 team for IPL 2021


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal