வீட்டில் தனிமையை போக்க... சுவாரஸ்ய விளையாட்டு.. விளையாட ரெடியா? - Seithipunal
Seithipunal


தெருக்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடிய காலம் மாறி, இன்று அனைத்து தெருக்களும் வெறிச்சோடி கிடக்கிறது.

வெயில் காலங்களில் சிறுவர்கள் வெயிலில் விளையாடாமல், நிழலில் நம் வீட்டு திண்ணைகளில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளோ ஏராளம் உள்ளன.

அப்படி நாம் மறந்த விளையாட்டுகளில் ஒன்றுதான் செட் சேர்த்தல்... அது எப்படி விளையாடுவது?... வாங்க தெரிஞ்சுக்கலாம்...

எத்தனை பேர் விளையாடலாம்?

மூன்றுக்கும் மேற்பட்டோர்.

தேவையான பொருட்கள் : 

வெள்ளைக் காகிதம்.

பேனா.

எப்படி விளையாடுவது?

வெள்ளைத்தாளை ஒரு நபருக்கு நான்கு சீட்டுகள் வீதம் துண்டு துண்டாக கிழித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த தாள்களில் அவரவருக்கு பிடித்த ஒரு பெயரை எழுதிக்கொள்ள வேண்டும். அது ஒரு பூவின் பெயராகவோ, நபரின் பெயராகவோ, சினிமா பெயர்களாகவோ, நடிகர், நடிகைகளின் பெயராகவோ இருக்கலாம்.

மற்றொரு தாளில் விளையாடுபவர்களின் பெயரை எழுதிக்கொள்வர். அதில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் குறிக்கப்படும்.

பிறகு அனைவரும் குழுவாக அமர்ந்து விளையாட்டை தொடங்குவர். பெயர் எழுதிய தாள்களை நான்காக மடித்து ஒருவர் குலுக்கி போடுவார். ஒவ்வொருவரும் நான்கு சீட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அனைவரும் தங்களுக்கு வந்த சீட்டுகளை ரகசியமாக பார்த்து வைத்துக் கொள்வர். பின்னர் சீட்டுகளை யார் முதலில் குலுக்கிப்போட்டாரோ அவர்தான் முதலில் தனக்கு தேவையில்லை என்று நினைக்கும் ஒரு சீட்டை அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டாவது நபருக்கு முதல் நபர் கொடுத்த சீட்டு தேவையென்றால் அதை வைத்துக் கொண்டு, அவருக்கு எது தேவையில்லையோ அந்த சீட்டை மூன்றாவது நபருக்கு கொடுக்க வேண்டும்.

இதேபோல் விளையாட்டை தொடர்ந்து விளையாடுவார்கள்... இறுதியில் யாருக்கு நான்கு சீட்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கிறதோ அவர் குழுவிற்கு நடுவே செட் என்று கூறிக்கொண்டே தரையில் தன் கையை வைப்பார்...

அவரது கை மேல் விளையாடும் அனைவரும் தொடர்ச்சியாக தங்களது கையை வைப்பார்கள்...

குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அதாவது, குழுவில் ஐந்து நபர்கள் இருந்தால் செட் அடித்தவருக்கு 500 மதிப்பெண்களும், அவருக்கு அடுத்ததாக கை வைத்தவருக்கு 400 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இவ்வாறு தொடர்ந்து விளையாடுவார்கள். இறுதியில் யார் புள்ளிப்பட்டியலில் அதிக மதிப்பெண்கள் வைத்துள்ளாரோ அவர்தான் ஆட்டத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

பலன்கள் :

குழு ஒற்றுமை மேம்படும்.

வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

80s 90s kids games


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->