இன்னும் 199 ரன்கள்.. ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பெறப்போகும் விராட் கோலி.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான விராட் கோலி, 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்களை எடுத்துள்ளார். தற்போது வரை 27 சதங்கள், 27 அரை சதங்கள் அடித்துள்ளார். 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடரில் 199 ரன்கள் அடித்தால் 8000 ரன்களை எடுத்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலியின் படைக்க உள்ளார். இதுவரை சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமணன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் ஷேவாக் ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர். 

27 சதம் அடித்துள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தார் ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்னேறுவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8000 runs virat kohli 6th indian batsman


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->