ஆப்கானுக்கு எதிரான டி20 தொடரில் 08 இந்திய இளம் வீரர்கள் அதிரடி நீக்கம்..!
8 young Indian players dropped from T20 series against Afghanistan
தலைநகர் டெல்லியில், வரும் செப்டம்பர் 13- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 03 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ (BCCI) சமீபத்தில் அறிவித்தது.
இந்த அணியில், ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்ற அணியில் இருந்து முக்கிய வீரர்கள் உட்பட மொத்தம் 08 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஜிம்பாப்வே தொடரின் 03 போட்டிகளிலும் விளையாடி 37 ரன்கள் எடுத்த ரிங்கு சிங், ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, பிரப்சிம்ரன் சிங், மயாங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், யஷ் தாக்கூர், அசோக் சர்மா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பிரப்சிம்ரன் சிங்:
பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் கீப்பர்-பேட்டரான பிரப்சிம்ரன் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, உள்நாட்டு டி20 போட்டிகளில் 125*, 110 மற்றும் 90 ரன்கள் குவித்துத் தனது அதிரடிப் பார்மை வெளிப்படுத்தி வருகிறார்.
மயாங்க் யாதவ்:
ஜிம்பாப்வே தொடரில் 05 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய இவர், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணிக்கு திரும்பியதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
பிரின்ஸ் யாதவ்:
இவர் விளையாடிய 02 போட்டிகளில் 04 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ், காயத்தால் 03-வது போட்டியை தவறவிட்டார். தற்போது ஆப்கானிஸ்தான் தொடரிலும் சேர்க்கப்படவில்லை.
ஹர்ஷ் துபே:
வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளரான இவர் ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு பெறவில்லை. தற்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி அணிக்குத் திரும்பியதால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சூர்யான்ஷ் ஷெட்ஜ்:
மும்பை பேட்டரான சூர்யான்ஷ் ஷெட்ஜ் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் தலா ஒரு டி20 போட்டியில் விளையாடிய இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
யஷ் தாக்கூர்:
ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 அறிமுகத்தைப் பெற்று, 02 போட்டிகளில் 04 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான திறமையை வெளிப்படுத்திய போதிலும் அணியில் இடம்பெறவில்லை.
அசோக் சர்மா:
ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான இவர் 02 போட்டிகளில் 01 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். தற்போது காயம் காரணமாகத் தேர்வுக் குழுவின் பரிசீலனையில் இடம்பெறவில்லை.
English Summary
8 young Indian players dropped from T20 series against Afghanistan