2026 ஐபிஎல் மினி ஏலம்: மெகா சதானையுடன் கே.கே.ஆர் அணிக்கு சென்ற மதீஷா பதிரானா – விவரம் இதோ - Seithipunal
Seithipunal


2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 25 கோடி 20 லட்சம் என்ற அதிகபட்ச விலைக்கு வாங்கி சாதனை படைத்தது. இதற்கு முன் மிட்சல் ஸ்டார்க் ரூபாய் 24 கோடி 75 லட்சத்திற்கு ஏலம் போனதே உயர்ந்த தொகையாக இருந்த நிலையில், அந்த சாதனையை தற்போது கேமரூன் கிரீன் முறியடித்துள்ளார்.

இந்த மினி ஏலத்தில் அதிக கையிருப்பு தொகையுடன் கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகள் பங்கேற்றிருந்தன. இரு அணிகளும் முக்கிய வீரர்களை வாங்க கடும் போட்டியை வெளிப்படுத்தின. அதன் ஒரு பகுதியாக கேகேஆர் அணி ஆல்ரவுண்டராக கேமரூன் கிரீனையும், வேகப்பந்து வீச்சாளராக இலங்கை வீரர் மதீஷா பதிரானாவையும் தங்களது அணியில் இணைத்துள்ளது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூபாய் 13 கோடிக்கு விளையாடியிருந்த பதிரானாவை சிஎஸ்கே கழற்றிவிட்ட நிலையில், இந்த மினி ஏலத்தில் கேகேஆர் அணி ரூபாய் 18 கோடிக்கு அவரை வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இலங்கை வீரர் என்ற சாதனையை மதீஷா பதிரானா படைத்துள்ளார்.

பதிரானாவின் சேர்க்கையால் கேகேஆர் அணியின் பந்துவீச்சு யூனிட் மேலும் வலுப்பெற்றுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2025 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் எடுத்த பதிரானா, இதுவரை ஐபிஎலில் மொத்தம் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2026 IPL Mini Auction Madisha Pathirana joins KKR with mega bid here are the details


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->