#AsianGames2023 | 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் தொடங்கியது! - Seithipunal
Seithipunal


19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு ஆசிய போட்டிகளை தொடங்கி வைத்தார். இன்று தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த போட்டிகள் அனைத்தும் ஹாங்சோவில் அமைக்கப்பட்டுள்ள 56 அரங்கங்கள் மற்றும் மைதானங்களில் நடைபெற உள்ளது. சீனா ஜப்பான் இந்தியா தென் கொரியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 40 வகையான விளையாட்டுக்களுடன் 61 பிரிவுகளில் நடைபெறுகிறது. 

ஆசியவிளையாட்டுப் போட்டியில் கால்பந்து, கிரிக்கெட், படகு பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் வீராங்கனைகள் ஆசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 655 வீரர்கள் வீராங்கனைகள் 40 வகை போட்டிகளில் 482 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்று 8வது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19th Asian Games began in China


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->