15வது ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம்..!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி இன்று ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூர்கேலாவில் அமைந்துள்ள ஹாக்கி கிராமத்தில் இன்று 15-ஆவது ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 44 போட்டிகள் நடைபெறுகிறது. நான்கு பிரிவிலும் முதலிடத்தை பெரும் நான்கு அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ள டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று இரவு 7 மணிக்கு ஸ்பெயினை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இருந்து இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்தும் என இந்திய ஹாக்கி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி காலிறுதியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என போராடி தோற்றது. இந்திய அணி கடந்த 1975ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் உலக கோப்பையை இந்தியா வெல்லவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை ஹாக்கி தொடரானது இந்தியாவில் இது நான்காவது முறையாக நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15th Mens World Cup of Hockey starts today in India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->