இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி.. இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாட உள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரும், உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரருமானவர் விராட் கோலி. இந்திய அணிக்காக அவர் இதுவரை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல அதிரடி சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்துள்ளார். இவர் இலங்கையுடன் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளார். 

இந்திய அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12வது இந்திய வீரர் விராட் கோலி ஆவர். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம். 

சச்சின் டெண்டுல்கர் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்துள்ளார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

வி.வி.எஸ். லட்சுமணன் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சுனில் கவாஸ்கர் 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். திலீப் வெங்கர்சகர் 116 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பிசிசிஐயின் தலைவர் சௌரவ் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இஷாந்த் ஷர்மா 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். வீரேந்திர சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஹர்பஜன்சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  தற்போது இவர்களது பட்டியலில் விராட் கோலி இணைய உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100th test match from virat kohli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->