வாழ்வில் அதிசயங்கள் ஏற்பட.. வெள்ளி மோதிரத்தை இவ்வாறு அணியுங்கள்.! - Seithipunal
Seithipunal


வெள்ளி மோதிரமும்... அதன் ஆன்மிகமும்:

நாம் வெள்ளி மோதிரம் அணிவதற்கும், செல்வம் பெருகுவதற்கும் தொடர்பு இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திர கிரகத்துடன் தொடர்புடையதாகும். பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம். 

வெள்ளி மோதிரம் அணிவது என்பது இன்றைய இளைஞர்கள் பலரிடமும் இருக்கும் ஒரு பழக்கமாகும். இதன் நன்மைகள் தெரியாமலேயே அதனை அணியும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதாவது வெள்ளி மோதிரத்தை அணிவது மிகவும் சிறந்தது.

உண்மையில் வெள்ளி அணிவது உங்களுக்கு ஆரோக்கியம் ரீதியான பல பலன்களை அளிக்கும். அதேசமயம் சரியான விரலில் மோதிரம் அணிவது வாழ்வில் அதிசயங்களையும் உண்டாக்கும். வெள்ளியை எப்படி பயன்படுத்தினால் வாழ்வில் சிறப்பை உண்டாக்கும்? என்று பார்க்கலாம் வாங்க...

வெள்ளி மோதிரம் அணியும் முறை :

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும், பன்னீரும் கலந்த நீரில் கழுவி இஷ்ட தெய்வம் அல்லது மகா லட்சுமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.

வெள்ளி மோதிரத்தை மோதிர விரல் அல்லது நடு விரல் அல்லது ஆள்காட்டி விரல் ஆகிய விரல்களில் அணிந்து கொள்ளலாம்.

அதாவது மேஷம், சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசியை சார்ந்த பெண்கள் மோதிர விரலிலும்,

ரிஷபம், கன்னி, மகரம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நில மற்றும் நீர் ராசியை சார்ந்தவர்கள் நடு விரலிலும்,

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியை சார்ந்தவர்கள் ஆள்காட்டி விரலிலும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

இவ்வாறு வெள்ளி மோதிரம் அணிவதால் வெள்ளியிலிருந்து வெளிவரும் ஒரு சில மின் அலைகள் உடலில் இருக்கும் நரம்புகள் வழியே சென்று உடல் உள் உறுப்புகளுக்குள் இருக்கும் நோய்களை குணப்படுத்துகிறது.

வெள்ளி மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ளலாம்.

பலன்கள் :

வெள்ளி மோதிரம் அணிவதால் அழகும், ஆளுமையும் அதிகரிக்கும்.

வெள்ளி மோதிரமானது சந்திரனின் தாக்கத்தை அதிகரிப்பதுடன் சளி மற்றும் இருமல் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.

தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வெள்ளி மோதிரத்தை அணியலாம்.

இதனால் வாழ்வில் செல்வ வளமும், அதிர்ஷ்டமும் பெருகும்.

இது கோபத்தை கட்டுப்படுத்தி சந்தோஷமாக வைத்திருக்க உதவும்.

கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை இது குறைக்கிறது.

இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

மூட்டு வலி, மனநிலை பாதிப்பு, மனக்குழப்பம் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற நோயின் தீவிரம் குறைக்க இது உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

velli mothiram for money growth


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->