1 ரூபாய் இல்லாதவர்களிடமும் பணம் சேரும்... வீட்டில் இதையெல்லாம் செய்து பாருங்க..! - Seithipunal
Seithipunal


வாழ்க்கையில் பணமில்லாமல் இருப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஒவ்வொன்றுமே பணத்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். வீட்டில் செல்வம் பெருகுவதற்கு வாஸ்து முறைகள் உள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

* பொதுவாக படுக்கை அறையில் ஒரு நாளைக்கு 20 நிமிடம் ஆவது ஜன்னலை திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் புதிய காற்று உள்ளே வரும் இல்லையென்றால் இரவில் பழைய ஆற்றலுடன் உறங்கும் நிலை ஏற்படும். இது அமைதி மற்றும் செழிப்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. 

* வீட்டில் இருக்கும் கடிகாரம் வேலை செய்யவில்லை என்றால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் அல்லது மாற்றி விட வேண்டும். வீட்டில் வேலை செய்யாத கடிகாரம் இருந்தால் நிதி நெருக்கடி ஏற்படும். வேலை செய்யாத கடிகாரம் நிலுவையில் உள்ள தேதிகளை குறிக்கும் என்பதால் பிரச்சனை தீராமல் இருக்கும். 

* வீட்டில் தென்கிழக்கு பகுதிகளில் நீர்நிலை போன்ற பவுண்டைன் அல்லது குடம் போன்றவற்றை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால் பணம் சேரும். செல்வம் பெருகும். 

* வீட்டில் டைனிங் டேபிளை எந்த இடத்தில் வைத்திருந்தாலும் அது கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உணவு பஞ்சம் ஏற்படாது. சமையலறையில் பழங்கள் காய்கறிகளின் படங்களை மாட்டி வைக்கும் பொழுது பசியை தூண்டும். அதே சமயத்தில் உணவின் இருப்பை உறுதி செய்யும். 

* வீட்டில் வடக்கு திசை பகுதியில் நீர் வடிகால் எப்பொழுதும் வைக்க வேண்டும். வீட்டை கட்டும்போது அழுக்கு நீர் வடிகால் வடக்கு திசை நோக்கி இருப்பது நல்லது. இது வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பண வரவுக்கும் உதவும். 

* வீட்டில் மொட்டை மாடியில் உபயோகம் இல்லாத பொருட்களை ஒரு மூலையில் குப்பை போல வைத்திருப்பார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஏனென்றால் வாஸ்து சாஸ்திரப்படி மொட்டை மாடி அசுத்தமாக இருந்தால் வீட்டின் வறுமை அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaasthu house grow wealth


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->