கடற்கரை கோயில்.. சந்திரனின் சாபம் தீர்த்த தலம்.. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

குஜராத் மாநிலம், ஜுனாகட் மாவட்டத்தில் உள்ள பிரபாச பட்டணம் என்னும் ஊரில் அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

 குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள அரபிக் கடலோரத்தில் கம்பீரமாய் சோமநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில்.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரபாஸா சக்தி பீடம் ஆகும். சந்திரனின் சாபம் தீர்த்த தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.

சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.

சோமநாதர் கோயில் கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தின் மேல் பல கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு அனுமன், விநாயகர், துர்க்கை, பைரவர், காளி போன்ற பரிவார தெய்வங்கள் உள்ளன.

வேறென்ன சிறப்பு?

சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதி காலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது.

இத்தலத்தில் திரிவேணி தீர்த்தம், கபில தீர்த்தம், சூரிய சந்திர குண்டம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

நவராத்திரி விழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

சகல பாவங்கள் நீங்கவும், இறப்பிற்கு பின் முக்தி கிடைக்கவும் இங்குள்ள சோமநாதரை பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சோமநாதரை வில்வ இலையாலும், மலர்களாலும் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special Gujarat somanathar temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->