இன்று கோலாகலமாகத் தொடங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்.! - Seithipunal
Seithipunal


இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேரோட்டம்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதத்திற்கான தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்துள்ளார். 

இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளித்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்தத் தேரோட்டத்தை பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today samayapuram mariyamman temple cithirai therottam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->