கோவை : இன்று ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


கோவை யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா இன்று மாலை 6மணி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது.

மேலும், இன்றைய தினம் ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்விழா மார்ச் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நாளை காலை 6 மணி வரை நடைபெறும். சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும்.

மேலும் கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மிக குறைவான மக்கள் மட்டுமே இவ்விழாவில் நேரில் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே நேரலையில் பங்கேற்கலாம்.

இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான சத்குரு தமிழில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, என பல்வேறு மாநில மொழிகளில் முன்னனி தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today isha yoga foundation celebrate maha Shivaratri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->