இன்று அட்சய திருதியை.. மங்கள பொருட்கள் வாங்க நல்ல நேரம்..அட்சய திருதியையின் சிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


ஜோதிட ரீதியாக குரு என்று சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.

யாரை வழிபட வேண்டும்?

அட்சய திருதியை நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து விரதமிருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வத்தை பெற்று சிறப்பான வாழ்க்கையை பெற்றிடலாம்.

மங்கள பொருட்கள் வாங்க நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை

நண்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை

மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை

இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை

அட்சய திருதியையின் சிறப்புகள் :

அட்சய திருதியை தினத்தன்று தான் விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

காசி அன்னபூரணி, அட்சய திருதியை தினத்தன்று தான் தன்னுடைய தரிசனத்தை உலக மக்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தாள்.

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரம்.

அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லைகள் ஒழியும்.

அட்சய திருதியை அன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

அட்சய திருதியை தினத்தன்று செய்ய வேண்டியவை :

இந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. உப்பு வாங்கினாலே போதும். இல்லத்தில் சுபிட்சமும், ஐஸ்வரியமும் குடிகொள்ளும் என்பது உறுதி.

அட்சய திருதியை நாளில் கட்டாயம் நாம் எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு விஷயம் 'தானம்".

இந்த தானத்திற்கு ஈடுஇணை இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. உங்களிடம் இருக்கும் வசதிக்கு ஏற்ப உங்களால் இயன்ற அளவு, இயலாதவர்களுக்கு தானம் கொடுப்பது பல கோடி புண்ணியத்தை சேர்க்கும்.

உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் பரம்பரைக்கும் இது புண்ணியத்தை தேடித்தரும் என்று சொன்னால் அது மிகையாகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today atchaya thiruthiyayai special


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->