மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களான துலாம் ராசி அன்பர்களே..!! - Seithipunal
Seithipunal


மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யதீபாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்கியது.

ராசிநாதனான சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ஆட்சிப்பெற்ற நிலையில் இருப்பதால் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

புதிய முயற்சிகள் மற்றும் பயணங்களின் மூலம் பொருளாதார நிலைகள் மேம்படும். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் நெருக்கமானவர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்க்க இயலும். 

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் சுபக்காரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பழைய வாகனங்களை மாற்றி விருப்பம் போல் புதிய வாகனங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள விஷயங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் கருத்துக்களை கூறவும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு :

நவீன ரசாயனங்களை பயன்படுத்தும்போது தகுந்த ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பு உயரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட மனை மற்றும் வீடுகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் கடன் உதவிகள் சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரம் தொடர்பான புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தொழில் சார்ந்த துறைகளில் புதிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையாட்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். 

மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று விரும்பிய கல்லூரியில் சேர்ந்து பயில்வீர்கள். ஆராய்ச்சிகள் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பேச்சுத்திறமைகள் வெளிப்படும் போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள்.

பெண்களுக்கு :

திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனைகள் வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும். பணிகளில் தடைபட்ட பதவி உயர்வுகள் சாதகமாக அமையும். தனவரவுகள் மேம்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் தாங்களே பணிகளை மேற்கொள்வது உத்தமமாகும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறைகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். கவனக்குறைவால் சில பணிகளை முடிக்க காலதாமதம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களின் மூலம் எண்ணிய எண்ணங்களும், வருவாய்களும் பெருகும். 

பரிகாரம் :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர உறவுகளிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thulam rasi 2020


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->