விருட்ச சாஸ்திரம் : வீட்டில் தென்னை மரத்தை எந்த இடத்தில் வைக்கலாம்?
Thennai maraththai entha idaththil vaipathu
வீட்டில் தென்னை மரம் வளர்க்கலாமா?
தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தான் தென்னை மரத்தை ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள். சங்க நூல்களில் தென்னை மரத்தை 'தெங்கு" என்று கூறுவார்கள். தென்னை மரத்திற்கு 'தாழை" என்ற பெயரும் உண்டு.
தென்னிந்தியாவில் மிக அதிகமாக தென்னை மரத்தை காணலாம். லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள் மற்றும் ஒடிசாவிலும் தென்னை மரத்தை அதிக அளவு காணலாம். தென்னை மரம் 15-30 மீட்டர் உயரமாக வளரும்.
தென்னைமரம் உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து பாகங்களும் நன்மை பயக்கும். தென்னை மரத்தின் இளநீர், தேங்காய் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமானது.
தேங்காயின் சதை பகுதியை தென்னிந்திய சமையலில் பயன்படுத்தி பல்வேறு வித்தியாசமான உணவுகளைத் தயாரிப்பார்கள்.
தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கும், தலைமுடிக்கும் பயன்படுகிறது. தேங்காயின் நார் பாய் மற்றும் கார்பெட் போன்றவற்றின் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுகிறது.
தென்னை மரத்தின் இலைகளை நெய்து, ஏழை மக்கள் தங்கள் வீடுகளுக்கு கூரையாக பயன்படுத்துகின்றனர். இதன் காய்ந்த இலைகள் எரியூட்ட பயன்படுகின்றன.
இதன் பயன்பாடு காரணமாக இதனை ஒரு புனிதமான மரமாக கருதுகின்றனர். அதனால் இந்த மரத்தை உங்கள் வீட்டு தோட்டத்தில் கட்டாயம் வளர்க்கலாம்.
வீட்டில் தென்னை மரத்தை எந்த இடத்தில் வைக்கலாம்?
வீட்டில் தென்னை மரத்தை ஒற்றை எண்ணிக்கையில் வளர்க்கக்கூடாது. தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும்...
வீட்டில் பாத்திரங்கள் கழுவும் இடத்துக்கு அருகில் தென்னை மரம் இருக்க வேண்டும்.
தென்னை மரத்தை எந்த திசையில் வைக்கலாம்?
தென்னை மரத்தை வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வைத்தால் வீட்டிற்கு சூரிய ஒளி சரிவர கிடைக்காது.
எனவே தென்னை மரத்தை எப்போதும் வீட்டின் மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் வைக்கலாம்.
வீட்டின் வாயு மூலையில் தென்னை மரம் வைப்பதை தவிர்க்கவும்.
தென்னை மட்டை மேலே விழுந்தால் நல்லதா? கெட்டதா?
தென்னை மட்டை மேலே விழுந்தால் கெட்டதாகும். இதனால் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
வீட்டில் ஒற்றை தென்னை மரம் வளர்ப்பது சரியா? தவறா?
தென்னை மரம் என்பது மிக உயரமாக வளரக்கூடிய மரம் இதை வீட்டின் முன்பகுதியில் வளர்க்ககூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் தென்னை மரத்தின் மட்டை, காய் போன்றவைகள் மனிதர்கள் தலை மீது விழுந்து விடக்கூடாது என்பதற்காக தான். மேலும் யாருக்கும் எந்த தொல்லையும் வராது.
மேலும் ஒற்றை தென்னை மரம் வளர்க்கக்கூடாது என்பது வீட்டினுடைய ஒரு பகுதி மட்டும் உயர்ந்தது போல் ஆகிவிடும் இந்த உயரம் தென்மேற்கு மூலையை தவிர மற்ற பகுதியில் இருந்தால் வாஸ்துபடி சிக்கலாகிவிடும்.
எனவே தென்மேற்கு மூலையில் மட்டும் ஒரு மரம் இருந்தால் பிரச்சனை கிடையாது ஆனால் அது பல நேரம் சாத்தியம் இல்லாத விஷயம் என்பதனால் இரட்டை மரம் வளர்ப்பதே மிக சிறந்தது.
English Summary
Thennai maraththai entha idaththil vaipathu