ஆன்மிக தகவல்கள்! தொட்டதெல்லாம் வெற்றி பெற... தேய்பிறை சஷ்டி வழிபாடு.!
Theipirai sashti lighting remedy get success
ஐப்பசி பிறந்துவிட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதி என அழைக்கப்படும். சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். சஷ்டி திதி நாளன்று விரதம் இருந்து முருகப்பெருமானதார வழிபட்டால் திருமண வாய்ப்பு கை கூடும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை கடைபிடிப்பதால் குழந்தை பேரு உண்டாகும்.
சஷ்டி திதி பரிகாரத்திற்கு தேவையானவை நெல்லிக்காய், நெய். தேய்பிறை சஷ்டியில் எப்பொழுதும் போல் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து முருகப்பெருமானுக்கு சந்தனம், குங்குமம் வைத்து நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு நடுவில் குழி செய்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
இது போல் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் வீட்டில் உண்டாகும். வீட்டில் பண தட்டுப்பாடு எப்பொழுதும் ஏற்படாது.

பௌர்ணமி நாளிலிருந்து ஆறாவது நாள் சஷ்டி திதி, தேய்பிறை சாஷ்டி விரதம் கடைபிடித்தவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி முருகப்பெருமானின் படத்திற்கு மாலை அணிந்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
காலையில் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தால் பண பிரச்சனைகள் மற்றும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும். விரத நாள் முழுவதும் உபதேசம் இருந்து முருகப்பெருமானை மாலையில் வணங்கி பின்னர் விரதத்தை முடிவு நிறைவு செய்ய வேண்டும்.
English Summary
Theipirai sashti lighting remedy get success