மன இறுக்கத்தை போக்கி.. மன உறுதியை தரும்.. சிவப்பு சந்தன மாலை..! - Seithipunal
Seithipunal


சிவப்பு சந்தன மாலை:

சிவப்பு சந்தனம், விஞ்ஞான ரீதியாக டெரோகார்பஸ் சாண்டலினஸ் எல் என்று அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவ முறையின் ஒரு புகழ்பெற்ற தாவரம் ஆகும். மேலும் வீக்கம், காயங்கள், தோல் பிரச்சனைகள் மற்றும் இன்னும் பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பாரம்பரியமாக பயன்படுகிறது.

இந்த சந்தனமானது திலகமிடுவதற்கு மட்டுமின்றி மாலையாகவும் அணிவிக்கப்படுகிறது. நாமும் சந்தன மாலைகளை அணிந்து கொள்ளலாம். சந்தன மாலைகள் பல மாதங்களுக்கு மனம் மயங்கும் மணம் பரப்பக்கூடியவை.

சிவப்பு சந்தன மாலை பஞ்சபூதங்களின் துணையைப் பெற உதவி செய்கிறது. மேலும் எதிர்மறை சக்திகளை விலக்க பயன்படுவதாகவும் நம்பப்படுகிறது.

பொதுவாக ஹோமம், பூஜை, கோவில் திருவிழா மற்றும் தெய்வ தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும்போது சிவப்பு சந்தன மாலையை அணிந்து கொள்ளலாம்.

சிவப்பு சந்தன மாலையின் பயன்கள் :

உடல் வலிமை மற்றும் மன உறுதியை அதிகரிக்கிறது.

 இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

 அஜீரணம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

சளி, வயிற்றுப்போக்கு மற்றும் சரும நோய்களை நீக்கவும் பயன்படுகிறது.

புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன. 

மேலும் மார்பக, பெருங்குடல், கணையம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் வகைகளின் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.

 மன உறுதியையும், ஆன்மிக சக்தியையும் வழங்கும் சிவப்பு சந்தனம், மன ஒருமையோடு உடலுக்கு குளிர்ச்சியை தந்து, மன இறுக்கத்தை விலக்கி உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Red sandalwood malai for mind issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->