வருகிறது ஆடலரசனுக்கு ஆனி திருமஞ்சனம்.. விரைவில் திருமணம் கைகூட சிவனை வழிபடுங்கள்..!! - Seithipunal
Seithipunal


ஆனி உத்திரம் :

ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

ஆடலரசரான நடராஜருக்கு சிறந்த தினமான ஆனி உத்திரம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

உத்திரம் :

உலகெங்கிலும் வாழும் பெருமக்களுக்கெல்லாம் பரம்பொருளாக இருந்து இந்த உலகையும், மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஆனி உத்திர தரிசனம் அம்பலத்தாடும் நடராசருக்கு அதிகாலை நேரத்தில் ஆனந்த திருமஞ்சனம். பின்னர் சர்வ லோக நாயகராக சித்சபைக்கு நடராஜர் ஆனந்த தாண்டவமாடியபடி ஆனி உத்திர தரிசனம் தரும் நாள் ஆனி உத்திரம்.

ஆனி மாதம் என்றாலே ஆனி உத்திர விரதம் அனைவரின் நினைவுக்கும் வரும். சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகமும் ஒன்று. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் உண்டு.

வைகாசி மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், ஆனி மாதத்தில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், நடராஜ பெருமானை வெப்ப தாக்கத்திலிருந்து குளிர்விப்பிதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களை கொண்டு ஆனி மாதத்தில் திருமஞ்சனம் செய்கின்றனர்.

பலன்கள் :

ஆனி திருமஞ்சன நாளில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை பெண்கள் தரிசித்தால் சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.

கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும்.

கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pray sivan for aani thirumanjanam


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->