குடும்பத்தில் கடன் தொல்லைகளை போக்கும் பஞ்சகவ்ய விளக்கு.!
Panjakavya Vilakku for family issues Clearing
பஞ்சகவ்ய விளக்கு:
குடும்பத்தில் உள்ள கடன் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்க, லட்சுமி கடாட்சம் பெருக... நம்மை சுற்றி நேர்மறை அதிர்வுகளை உருவாக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். வீட்டில் ஹோமம் நடத்துவதற்கு இணையாக வேறொரு பரிகாரம் மற்றும் யாகம் செய்த பலன் கிடைக்க ஒரு சிறந்த வழி பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவது.
இந்த பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது யாகம் செய்வதால் கிடைக்கும் அதே நன்மைகள் கிடைக்கும். அது மட்டுமின்றி இதனால் நம்மை சுற்றி உள்ள அனைத்து நெகடிவ் வைப்-களும் நம்மை விட்டு அகன்று விடுகிறது.
இதனால் நமக்கு முக்கிய தேவைகளான ஆரோக்கியம், அமைதி, செல்வவளம் இவை அனைத்தும் தடங்கல் இன்றி நம்மை தேடி வரும்.
மேலும் இந்த பஞ்சகவ்ய விளக்கில் உள்ள பொருட்களால் கூடுதல் நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. பஞ்சகவ்யம் பஞ்ச பூதங்களை சமநிலை படுத்தும்.
பஞ்சகவ்ய விளக்கை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஒரு பித்தளை தட்டில் அல்லது வெற்றிலை அல்லது மண்விளக்கில் உள்ளே வைத்து நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றுவது போலே பஞ்சகவ்ய விளக்கை ஏற்றவேண்டும்.
விளக்கு ஏற்றிய பின்னர் விளக்கும் சேர்ந்து எரியும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் எரிந்த பின்னர் விளக்கில் இருந்து யாகம் செய்யும் போது வரும் புகையை போல் புகை வரும். அந்த புகை வீடு முழுவதும் பரவி நல்ல பயன் தரும் மற்றும் எரிந்து முடித்தவுடன் அந்த விளக்கில் உள்ள சாம்பலை திருநீறுடன் கலந்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம். அல்லது செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.
தினமும் பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றி வந்தால் ஏற்படும் நன்மைகள் :
வீட்டில் இருக்கும் தீய சக்தியை இது போக்கி பாஸிடிவ் வைபை உருவாக்கும்.
கடன் பிரச்சனையை போக்கும்.
செல்வ வளம் பெருகும்.
வீட்டில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும்.
நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்.
English Summary
Panjakavya Vilakku for family issues Clearing