பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!
Indian expatriates give a warm welcome to Prime Minister Modi
பிரேசில் சென்ற பிரதமர் மோடியை பிரேசிலின் பாதுகாப்பு துறை மந்திரி ஜோஸ் முசியோ மான்டீரோ பில்ஹோ விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார்.
டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார்.
3 நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு பின்னர், 6-ந்தேதிபிரேசில் நாட்டில் நடந்த 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21-ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியானது விளிம்பு நிலையில் உள்ளது . அதனால், சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையையும் அவர் சுட்டி காட்டினார்.
இதையடுத்து இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனல் ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு அவர் இன்று காலை சென்றார். அவரை, பிரேசிலின் பாதுகாப்பு துறை மந்திரி ஜோஸ் முசியோ மான்டீரோ பில்ஹோ விமான நிலையத்தில் வரவேற்றார். அப்போது, அப்போது அவரை இந்திய வம்சாவளியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி வரவேற்றனர். அவரை வரவேற்க காத்திருந்த குழந்தைகளிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார்.
பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
English Summary
Indian expatriates give a warm welcome to Prime Minister Modi