அரசியல்வாதிக்கே... வழிபாட்டு தீண்டாமையா!!! சாதியால் குடமுலுக்கில் செல்வப் பெருந்தகை அனுமதிக்கவில்லையா?- விசிக எம்.பி
Politicians Untouchability of religion Didnt they allow wealth Kudamuluk due to caste TVK MP
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காதது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து நிருபர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை தெரிவித்ததாவது , "2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும், அவரது பதிவில் குறிப்பிட்டதாவது," தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா?
அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ' வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Politicians Untouchability of religion Didnt they allow wealth Kudamuluk due to caste TVK MP