பணவரவு தரும் பச்சை கற்பூரம்..! வேறென்ன ரகசியம் இருக்கு?!
pachai karpuram palankal
கற்பூரத்தின் ஒரு வகையே பச்சை கற்பூரம் ஆகும். பச்சை கற்பூரத்தின் பயன்களோ அதிகம். பச்சை கற்பூரத்தை மருந்தாகவும், இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வாசனை பொருளாகவும் உள்ளது.
இது நல்ல வலி நிவாரணி என்பதால் தைலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சளி தொல்லையிலிருந்து விடுபடவும், வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
இனிப்பு பலகாரங்களை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட, பலகாரத்தில் கற்பூரத்தை சேர்த்து தயாரித்தால் நீண்ட நாட்கள் இருக்கும். எவ்வித பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை தொற்றுக்கள் இருக்காது.
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு.
பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை வீட்டில் தங்கச் செய்யும் தன்மை இருக்கிறது. அதனால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாத நிலை உருவாகும். வீண் செலவுகள் இருக்காது.
பச்சை கற்பூரத்தை பூஜையறையில் வைத்து வழிபடுங்கள். அப்படி பூஜையறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.
பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியேறிவிடும். அதனால் வீட்டில் எப்போதும் மனநிம்மதி இருக்கும்.
வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம்பெற செய்வது நல்லது. குறிப்பாக பணம் புழங்கும் இடங்களில் வாசனைமிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்துவரும்.
பச்சை கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும்போது, அங்கு வரும் எதிர்மறையான வாசனைகளையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும்.
பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து, உங்களது பர்சில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும். பணம் செலவானாலும், வரவும் இருந்து கொண்டே இருக்கும்.
தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக, பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
பூஜையறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.
பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.