அறிவையும், ஆற்றலையும் ஒளிரச் செய்யும் முருகன் மந்திரம்...! - Seithipunal
Seithipunal


அறிவையும், ஆற்றலையும் ஒளிரச் செய்யும் முருகன் மந்திரம்...! 

கந்தனை பூஜிக்கும் வேளையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும், திறமையும், தைரியமும் பெருகும். 

அந்த வகையில் ஒருவரின் அறிவையும், ஆற்றலையும் ஒளிரச் செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இதோ...

முருகன் காயத்ரி மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே 
மஹாஸேனாய தீமஹி தன்ன: 
ஷண்முக ப்ரசோதயாத் 
பொது பொருள்:

தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன். 

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்க முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ஜெபிக்கலாம். 

முருகன் வழிபாட்டிற்குரிய தினங்கள் :

தினந்தோறும் முருகப்பெருமானை வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன.

ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். 

அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரவல்லதாகும்.

முருகன் வழிபாடு பலன்கள் :

முருகப்பெருமானை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். 

எதிரிகள் தொல்லைகள் நீங்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். 

துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். 

நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். 

நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். 

சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். 

கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். 

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். 

வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். 

தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murugan slogan For growth


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->