பத்மாசனம் : இந்த ஒரு தியானம்., உங்கள் உடலில் செய்யும் மிக அற்புதமான மாற்றங்கள்.!  - Seithipunal
Seithipunal


பத்மாசனம் நாம் செய்வதால் நமது உடல் நல்ல சுறுசுறுப்பாக இயங்கும். ரத்த ஓட்டம் சீரடையும். இந்த தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முதலில் கால்களை நீட்டி அமர வேண்டும். ஒத்து ஒவ்வொரு காலாக தொடையில் மடித்து போட வேண்டும். பின்னர், கைவிரல்களை சின் முத்திரையில் வைக்கவும். 

கட்டை விரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும். கண்களை மூடி உங்களது மனதை தலை வெளி தசைகளில் நிறுத்தி கொள்ளுங்கள்.

அப்போது. உங்களின் எல்லா மன அழுத்தமம் உங்களை விட்டு நீங்குவதாக எண்ணிக்கொள்ளுங்கள். நல்ல பிராண ஆற்றல் உங்களுக்கு கிடைப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். 

பின் தோள்பட்டை வெளி தசைகளில் உங்கள் மனதை நிறுத்தி, அதில் உள்ள எல்லா டென்ஷனும் உடலை விட்டு நீங்குவதாக மனதால் எண்ணி தளர்த்தவும். 

இதேபோல் ஒவ்வொரு உறுப்பின் வெளி தசைகளில் மனதை நிறுத்தி தளர்த்த வேண்டும். இதய வெளி தசைகள். வயிற்று வெளி தசைகள், வலது கால், இடது கால் வெளி தசைகளிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்.

இப்போது, மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடயுங்கள். பத்து முறைகள் இவ்வாறு செய்யவேண்டும். பின் உங்கள் முதுகுத்தண்டின் கடைசி பகுதியான ஆசனவாய் அருகில் உள்ள மூலாதார மையத்தில் உங்களது மனதை வைத்து மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் அதிலிருந்து 4விரல்கட்டை மேல் பகுதியில் உங்கள் மனதை நிலை நிறுத்தவும்.

இந்த சக்கரத்தில், இந்த இடத்தில் உங்களது மூச்சோட்டத்தையும், மனதையும் நிறுத்தி ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும். பின்னர் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த தியானம் மூலம் அட்ரீனல் சுரப்பிக்கு நல்ல சக்தியளிக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meditation PATHMASANAM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->