கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
Meaning of snake dreams
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தூங்கும் போது கனவு வருவது என்பது சாதாரண விஷயம் தான். அந்த கனவு சில நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம்.
அதன்படி நமது கனவில் வரும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. இதில், கனவில் பாம்பு வந்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

பாம்பு கனவில் வந்தால் நீங்கள் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக் கூடாது. அந்தக் கடவுள் உங்களிடம் சில முக்கியமான விஷயங்களை சொல்வதற்கு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
பாம்பு கனவில் வந்தால் பெரும்பாலான ஆபத்தை முன்னாடியே எச்சரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு கடினமான காலகட்டம் உங்களை தேடி வருகிறது எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் விஷம் இல்லாத பாம்பு கனவில் வந்தால் அவர்களது வாழ்க்கையில் யாரோ ஒருவர் தீங்கு செய்ய முயற்சிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் உங்களுடன் தீய எண்ணம் கொண்ட ஒருவர் உங்களுடன் இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது.
பாம்பு படம் எடுக்கும் காட்சி உங்கள் கனவில் வந்தால் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாம்பு உங்களை கடித்தால் உடல் நல குறைவு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் பாம்பு உங்களை துரத்தினால் வறுமை ஏற்பட போகிறது என்று பொருள். பாம்பு உங்கள் காலை சுற்றி பின்னிக் கொண்டால் சனி பகவான் இடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டு எதுவும் செய்யாமல் அமைதியாக வெளியே சென்றால் நீங்கள் நேர்த்திக் கடன் விரைவில் செய்ய வேண்டும் என்பது பொருள். மேலும் பாம்பு படம் எடுத்து உங்கள் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல் என்றால் தெய்வங்களின் அனுக்கிரகம் உங்களின் மீது உள்ளது என்று பொருள்.
அதேபோல் கனவில் நீங்கள் பாம்பை அடித்துக் கொன்றாலோ அல்லது இறந்து கிடக்கும் பாம்பைப் பார்த்தாலோ உங்கள் வாழ்க்கையில் இருந்த ஆபத்து விலகி விட்டது என்று அர்த்தமாகும்.