பொன்னான புதன்கிழமையில்... இன்றைய நாளை இனிமையாக்கும் ராசிபலன்கள்...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்:

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பணிகளில் மந்தத்தன்மையால் சாதகமற்ற சூழல் உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பொதுச்செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும்.

மிதுனம்:

பிறமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். பணி தொடர்பான இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். புதுவிதமான ஆசைகள் மனதில் தோன்றும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

கடகம்:

கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற சூழல் ஏற்படும்.

சிம்மம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான முடிவுகளை ஆலோசனைகள் செய்து எடுக்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.

கன்னி:

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்:

இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் அகலும். வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். இணையதள பணியில் நல்ல லாபம் மேம்படும். புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

விருச்சகம்:

எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதரர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடும்.

தனுசு:

பணி தொடர்பான புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கனிவாக பேசவும். மனதில் தைரியம் உண்டாகும். திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்:

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியான செயல்களை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

கும்பம்:

தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும்.

மீனம்:

உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வீடு பராமரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 05 rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal