ஜூலை 14-இல் மதுரை திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு: நாளை முதல் யாகசாலை பூஜைகள் தொடக்கம்..!
Madurai Thiruparankundram Temple Kumbabhishekam on July 14th
கடந்த 07-ஆம் தேதி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வரும் ஜூலை 14-இல் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முருகப்பெருமானின் முதல்படை வீடாக திகழும் இந்த கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பொம்முதேவன், மணிச்செல்வம், ராமையா ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
-rdb7r.png)
அதன்படி, சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோயில் விமானம், கோயிலின் உபகோயில்கான சொக்கநாதர் கோயில், பழனியாண்டவர் கோயில், காசிவிசுவநாதர் கோயில், குருநாதர் சுவாமி கோயில், பாம்பாலம்மன், கோயில் ஆகிய இடங்களில் பாலாலயம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ராஜகோபுரம் திருப்பணிக்காக முகூர்த்தகால் நடும்விழா நடைபெற்றது. அடுத்து, மார்ச் 05-ஆம் தேதி முதல் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுரத்தில் திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை மாலை 05 மணி முதல் இரவு 08.30 மணி வரை முதல் யாகசாலை பூஜை தொடங்கவுள்ளது.
-d4cl7.png)
எதிர்வரும் 13-ஆம் தேதி வரை எட்டு கால நடைபெறவுள்ளது. இதற்காக யாகசாலை குண்டங்கள், வேதிகைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஜூலை 14-ஆம் தேதி அதிகாலை 05.25 மணி முதல் 06.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகாசாலைகள் தயாராகவுள்ளன.
English Summary
Madurai Thiruparankundram Temple Kumbabhishekam on July 14th